மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாளங்குடா பிரதேசத்தில்

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாரிய விபத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாளங்குடா பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்தின் மீது, கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற காரொன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணித்திருந்த நிலையில், அவர்களுள் இரு சிறுவர்களே இதில் படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு காரின் முன்பகுதியும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.