ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று பிற்போட்டமைக்கான காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஆந்திர பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவால் இலங்கைக்கு அனுப்பி வைத்த இந்திய பிரதிநிதிகள் குழுவை சந்திக்கும் நோக்கிலேயே ஜனாதிபதியின் யாழ் விஜயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆந்திர பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தேசிய அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூரத்தி நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

எனவே,ஆந்திர பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு இந்த மாதம் 07ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அபிவிருத்தி திட்டங்களுக்கு முக்கியப் புள்ளியாக ஆந்திர பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு இருக்கின்றார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.