அவுஸ்திரேலியாவில் உல்லாச விடுதி

ஒன்றில் பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது தொடர்பாக பொலிசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

பிரித்தானியவை சேர்ந்த Stacey Tierney என்ற 29 வயது இளம்பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள strip clubல் நடன அழகியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 19ம் திகதி காலை Stacey அந்த உல்லாச விடுதியில் பிணமாக கிடந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் Staceyன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உல்லாச விடுதி மூடப்பட்ட பிறகு Stacey பல ஆண்களுடன் உள்ளே இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் பிரேத பரிசோதனை தொடர்பான தகவல் வந்தால் தான் Staceyயின் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.