அஜீத்தின் தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் அன்று ரிலீஸாகக்கூடும் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் பைரவா படம் ரிலீஸாவதால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அஜீத் படம் வெளியாகாததால் தல ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இந்த பொங்கல் தளபதி மட்டும் அல்ல தல பொங்கலும் கூட. ஆம், பொங்கல் அன்று தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. வீரம் மற்றும் வேதாளம் படங்களை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 57. படத்தின் தலைப்பை சிவா இன்னும் வெளியிடவில்லை. பொங்கல் அன்று அவர் தலைப்பை வெளியிடுவாரா என்பது தெரியவில்லை. இந்த படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார். படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோரும் உள்ளனர்.