இப்படி ஒரு திருமண அழைப்பிதழா?

கலக்கலான ஒரு திருமண அழைப்பிதழ் வைரலாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.

அந்த திருமண பத்திரிகையின் விஷேசத்திற்கு காரணம் அதன் வித்தியாசமான மொழி உரையாடல்தான். “என்னய்யா விஷேசம்” என்ற தொனியில்தான் அழைப்பிதழின் முதல் வரியே ஆரம்பிக்கிறது.

அடுத்ததாக,

யாருப்பா மாப்பிள்ளை என்று மணமகன் பெயரும், யாருப்பா பொண்ணு என்று கேட்டு, மணமகள் பெயரும் இடம் பெற்றுள்ளது.

எப்போ, எங்க என்பது போன்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் உள்ளன.

இன்னுமொரு ஹைலைட் என்ன தெரியுமா? என்னப்பா சாப்பாடு?

என்று கேட்டு, நடக்குறது தாவறது, ஓடுறது போடுறது இதெல்லாம் போடனும்னு எனக்கும் ஆசைதான்.

ஆனால் துரதிருஷ்டவசமாக வெஜ் மட்டும்தான் என்று இடம் பெற்றுள்ளது.

கிப்ட் ஏதும் வாங்கிட்டு வரணுங்களா, என்று கேட்டு, அன்போட 500 ரூபா கொடுத்தாலும் சரி, பாசத்தோடு 1000 ரூபா கொடுத்தாலும் சரி, வாங்கிக்கோடானு அறிவு சொல்லுது.

நீங்க வந்தா மட்டும்போதும்னு மனசு சொல்லது. என் மனசுப்படி நீங்க வந்தா மட்டும் போதும்.

எல்லாம் சரி சரக்கு உண்டா?

இப்படியும் ஒரு கேள்வி உள்ளது.

குடி குடியை கெடுக்கும்.

கல்யாண வீட்டில் பஞ்சாயத்தை உண்டாக்கும். இவ்வாறு அதில் நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.