பிரித்தானிய மகாராணி மீது அரண்மனை காவலர்

ஒருவர் தவறுதலாக துப்பாக்கியால் சுட முற்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரவுநேரங்களில் தூக்கம் வராதா பொழுதுகளில் பிரித்தானிய மகாராணி அரண்மனை தோட்டத்தை உலாவருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாலை 3 மணியளவில் இவ்வாறு உலா வந்துள்ளார்.

இதனையடுத்து, இருளில் உருவம் ஒன்று தெரிவதை அவதானித்த அரண்மனை காவலர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை நீட்டியப்படி யார் என்று பார்த்துள்ளார்.

அது மகாராணி என்பதை அறிந்துகொண்ட அரண்மனை காவலர், மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், தவறு தன்னுடையது என்பதை உணர்ந்துக்கொண்ட மகாராணி, தாம் உலா வருவதற்கு முன்னர் காவலர்களுக்கு தகவல் சொல்லிவிடுவதாக கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்று சில ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இன்றைய தினமே பிரித்தானிய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.