பயிற்சி ஆட்டத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரகானேவிற்கு டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் ரகானே. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ரகானேவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்து தொடரின் பாதியில் ரகானே விலகினார்.

15-ந்தேதியில் இருந்து இங்கிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கு முன் 10-ந்தேதி மற்றும் 12-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் இங்கிலாந்து அணி, இந்திய ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இதற்கான அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ந்தேதிக்கான இந்திய ஏ அணிக்கு ரகானே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு இங்கிலாந்து தொடருக்கான ஒருநாள் போட்டியில் இடம்கிடைத்துள்ளது. ஆனால், டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்கிடைக்கவில்லை.

துணை கேப்டனாக உயர்ந்துள்ள ரகானேவிற்கு டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் கிடைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.