புங்குடுதீவு திரு நாவுக்கரசு வித்தியாலயத்தினை புனரமைக்க வடமாகாண சபை தீர்மானம்

06.01.2017 அன்று வடமாகாண சபையின் கல்வியமைச்சின் கூட்ட மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற, வடமாகாண கல்வியமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் “புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பானது” வடமாகாண சபையின் கல்வியமைச்சின், 2017ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் செய்து முடிப்பதென தீர்மானிக்கப்பட்டு அதற்கென நான்கு மில்லியன் ரூபா 4,000,000 (நாற்பது லட்சம் ரூபாய்) ஒதுக்கீடு செய்து கல்வியமைச்சினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.