பள்ளியில் நான் நடிகை ஸ்ரீதேவியை சீண்டிக் கொண்டே இருப்பேன் கமல் ஹாஸன்!

கே. பாலசந்தரின் பள்ளியில்

தனது ஜூனியரான ஸ்ரீதேவியை சீண்டிக் கொண்டே இருந்ததாக உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே மாநாட்டில் உலக நாயகன் கமல் ஹாஸன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தனது திரையுலக பயணம், நடிகர் ஓம் பூரி, நடிகை ஸ்ரீதேவி பற்றி பேசினார். நிகழ்ச்சியில் கமல் கூறுகையில்,

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி எந்த விஷயத்தையும் கவனிக்கும் திறன் நம்மை வியக்க வைக்கும். கே. பாலச்சந்தரின் பள்ளியில் நான் சீனியர். குரு இல்லாத நேரத்தில் நான் ஸ்ரீதேவியை சீண்டிக் கொண்டே இருப்பேன்.

மரணம்
மரணம் யாரையும் பாதிக்கும். மரணம் வாழ்வின் ஒரு பங்கு என்று நான் காலப்போக்கில் ஏற்றுக் கொண்டேன். மரணம் இல்லாமல் வாழ்க்கை முழு அர்த்தம் பெறாது.

ஓம் பூரி
ஓம் பூரியின் திறமையை தாண்டி அவரின் எளிமை எனக்கு பிடிக்கும். சிறு விஷயத்திற்கு கூட நன்றி தெரிவிப்பார். யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்று நினைப்பவர் என்றார் கமல்.

கமல்
கமல் ஹாஸனும், ஸ்ரீதேவியும் சேர்ந்து மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிவப்பு, சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட ஹிட் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அந்த காலத்தில் கமல்-ஸ்ரீதேவி ஹிட் ஜோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.