அதிபர்கள் இல்லாத தீவக பாடசாலைகள் சிலவற்றுக்கு கல்வியை காப்பாற்ற முன்வாருங்கள்!

தீவக பாடசாலைகள் சிலவற்றுக்கு அதிபர்கள் இல்லாததால் அப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

தீவக பாடசாலைகள் சிலவற்றுக்கு அதிபர்கள் இல்லாததால் அப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் வடமாகாண சபையின் முதலமைச்சரின் கண்டிப்பான உத்தரவுக்கு அமைவாக இவ்வருடம் 02/01/2017 நாள் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில்208 பாடசாலைகளுக்க புதிய அதிபர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதில் தீவக கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கும் புதிய அதிபர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இவ் நியமனம் செய்யப்பட்ட அதிபர்களில் 5பாடசாலைகளை நேற்றைய(09/01 /2017) தினம் வரைக்கும் பொறுப்பு எடுக்கப்படவில்லை.

அதாவது நெடுந்தீவில் இரண்டு பாடசாலைகள் அனலைதீவில் ஒரு பாடசாலை,எழுவதீவில் ஒரு பாடசாலை,நயினாதீவில் ஓரு பாடசாலை இப்பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றவர்கள் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பித்தவர்களாம்.

மேலும் தீவகத்துக்கு வந்து சேவையாற்ற பின்னடிப்பதுடன் சிலர் அரசியல் செல்வாக்க பயன் படுத்தி தமக்கு விருப்பமான இடத்திலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்காக முயற்சிப்பதாக அறியப்படுகின்றது.

சம்மந்தப்பட்ட வர்களே இவ்விடையத்தை கவனத்திலெடுத்து தீவகத்தின் கல்வியை காப்பாற்ற முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்