பூ மழை பொழிவதை போல அழகிய மலர் பாதை!

ஜப்பானில் உள்ள கவாச்சி பியூஜி தோட்டத்தில் விஸ்டேறியா மலர்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ள பாதையை உலகத்திலேயே மிக அழகிய மலர் பாதை என்று கூறலாம்.

மல்லிகை பூக்கள் அளவில் இருக்கும் விஸ்டேறியா மலர்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகைக் கொண்டுள்ளது.

கிழக்கு அமெரிக்கா, ஜப்பான், கொரியா என்று சில நாடுகளில் காணப்படும் விஸ்டேறியா மலர் செடி லெகுமே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்த விஸ்டேறியா மலர்ச் செடிகளைக் கொண்டு ஜப்பானில் உருவாக்கப் பட்டுள்ள மலர்ப் பாதை உலகத்திலேயே மிக அழகிய இடங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

இந்த மலர் பாதையைப் பார்க்கும் போது வானத்திலிருந்து பல வண்ணங்களில் பூ மழைப் பொழிவதை போல் காட்சியளிக்கின்றது.

கவாச்சி பியூஜி தோட்டத்தில் உள்ள விஸ்டேறியா மலர்ப் பாதையிலிருந்து மேலும் சில போட்டோக்கள்.

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA