நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் விஜய்யின்

பைரவா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், படம் வெளியாவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் – பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், பைரவா படத்துக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, 12-ம் தேதிக்குள் படத்தயாரிப்பாளர், தமிழக அரசு, திரையரங்கு அதிபர்கள் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதுபற்றி புகார் அளிக்கக்கூடிய விவரத்தையும் சமர்ப்பிக்க உத்தவிரப்பட்டுள்ளது. இந்தத் திடீர் வழக்கால் படம் திட்டமிட்டப்படி 12-ம் தேதி வெளியாகுமா என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.