புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேரையும் தண்டித்துவிட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தை தண்டிக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு எதிராக சர்வதேச நகர்வுகளை பலப்படுத்தும் வகையிலும், புலம் பெயர் புலிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் பலமாகவுமே பொதுமக்கள் கருத்தறிந்த நல்லிணக்க செயலணியின் அறிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணி உருவாக்கப்பட்டு, குறித்த செயலணி நாடலாவிய ரீதியில் மக்கள் கருத்துக்களைப் பெற்றது.

நாடலாவிய ரீதியில் மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்களை அறிக்கையாக தயாரித்து கடந்த 6 ஆம் திகதி நல்லிணக்க செயலணி அரசாங்கத்திடம் கையளித்தது.

 

குறித்த அறிக்கையில் போர்க் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு பட்டவர்கள் என குற்றஞ்சாட்டப்படும் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு புனர்வாழ்வு அழிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாகவே புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 12 ஆயிரம்பேரையும் தண்டித்துவிட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தை தண்டிக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தி அவர்களைப் பலப்படுத்த முயற்சிப்பதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளே நாட்டில் நல்லிணக்கத்தை குழப்பியதாகவும், யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னரே நாட்டில் அமைத்தியும், நல்லிணக்கமும் மலர ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளில் தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், ஸ்ரீலங்காவில் உள்ள மக்கள் தற்போது அவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.