ஐ.நா நோக்கிய நீதி கோரிய பயணத்தின் அடுத்த கட்டமாக தை திங்கள் 1ம் நாள் அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் சந்திப்புகள்..


தைப்பொங்கள் திருநாளாம் தை 14 அன்று
ஸ்ரீ ஈலிங்கணகதுர்க்கை அம்மன் கோயிலுக்கு முன்பாக 5 Chapel Rd, London, W13 9AE என்னும் இடத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

முக்கியமாக “Monitoring Accountability panel – MAP”‘ பின் பரப்புரை இடம்பெற்றது, இது வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எப்படி அழுத்தங்களை கொண்டுவரப்போகின்றது என்பது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கபட்டது.

மற்றும் சர்வதேச இன அழிப்பு தடுப்பு மற்றும் வழக்கு மையம் (ICPPG)இடம் சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் பதிவு தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் பரப்புரை இடம்பெறது, இதில் புதிய சாட்சியங்கள் வழங்க விரும்புவோரின் தகவல்களும் திரட்டபட்டது.
இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,பல முக்கிய செயற்பட்டாளர்கள் கலந்து கொண்டனர்.