தான் பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை அறிவித்தார்.

ஹெல உருமய கட்சியின் உறுப்பினரான அவர், தான் இன்றிலிருந்து எந்தவொரு கட்சிக்கும் உரித்தானவன் அல்ல என தெரிவித்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உருமய கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். மஹிந்த ராஜபக்‌ஷ அரசிற்கு ஆதரவளித்த அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாதிக ஹெல உருமய கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான சம்பிக ரணவக்கவுடன் அவ்வரசிலிருந்து விலகி நல்லாட்சி அரசிற்கு ஆதரவு வழங்கினர்.

அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.