பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகம் செய்யும் நோக்கில் கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பை வரைவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய அமைச்சரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அக்குழு தனது கலந்தாய்வுகளை பூர்த்தி செய்து, தயாரித்த உத்தேச கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பின் வரைவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, அது தொடர்பில் மேலும் கலந்தாலோசிக்கவென தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவின் அவதானிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு குறித்த உத்தேச கொள்கை மற்றும் சட்ட ரீதியான அலுவல் கட்டமைப்பின் வரைபை ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தகவல் மையதால் லெ. தெய்வேந்திரன் ஒழுங்கமைப்பில் திரு. வரதகுமார் அவர்களின் தலைமையில் 27/01/2017 அன்று நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) பற்றியும் மற்றும் சர்வதேச நாடுகளையும் அமைப்புக்களையும் கண் துடைப்பு செய்யும் முகமாக புதிதாக அமுல்படுத்தப்படவுள்ள உத்தேச பயங்கரவாத தடைச் சட்டத்தை CTA ( Counter Terrorism Act)பற்றியும் அதன் பக்க விளைவுகள் தொடர்பாகவும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது

The UN Security Council

International Human Rights Standards

The Universal Declaration of Human Rights (UDHR)

Human Rights and PTA in Sri Lanka Q & A

அத்தோடு கேள்விக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் TIC உறுப்பினர்களால் பல்வேறுபட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டது,
இதற்கான பதில்களும் ஆதாரத்துடன் ஒப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் தொடர்ச்சியாக நடந்துவந்த, நடந்துவருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் புலம்பெயர் தமிழ் மக்களால் அதற்கெதிராக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது.

தகவல் கார்த்தீபன்