பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள

‘ஹசீனா’ படத்தின் மிரட்டும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம் தங்கை ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஷ்ரத்தா கபூர், இதுவரை ரசிகர்கள் மனதில் பக்கத்துவீட்டுப் பெண் போன்ற நிலையை உடைத்தெறியும் வகையில் முதல் பார்வையிலேயே வித்யாசமான தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ‘ஹசீனா’ படத்தின் முதல் பார்வைக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அபூர்வா லக்ஹியா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹசீனா’ திரைப்படம் தாவூத் தங்கையின் உணர்ச்சி மிகுந்த சரித்திரத்தை சித்தரிக்கும் வகையில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘நாக்பாடாவின் ராணியாக’ திகழ்ந்த ஹசீனா பார்கரின் 17வது வயது முதல் 40 வயது வரை சித்தரிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த கபூரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

‘ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் காரணத்தால் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசிய ஷ்ரத்தா கபூர், ஹசீனாவிடம் மட்டும் சந்திக்க முடியவில்லை என்று வருந்தினார். ஹசீனா, கடந்த 2014 ஆம் ஆண்டு நெஞ்சு வலி காரணமாக மரணமடைந்தார்.

ஹசீனா பார்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஹசீனா’ திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.