உலக அளவில் பல்வேறு தரப்பினரையும் இணைத்து வரும் சமூக வலைதளமான பேஸ்புக்கில் உறுப்பினர் எண்ணிக்கை மிக விரைவில் 200 கோடியாக உயர உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் பயன்படுத்துபவர்கள், இன்டர்நெட் வளர்ச்சி, பயன்படுத்த அளிக்கும் ஊக்கம் ஆகியவற்றால் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு முடிவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 186 கோடியாக இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்குள் 200 கோடியை எட்டும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி டேவிட் வேஹ்னர் கூறுகையில், “ இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்டர்நெட்பயன்படுத்த மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், திட்டங்கள், உலக அளவில் பயன்படுத்துபவர்கள் எழுச்சி, இலவச இன்டர்நெட் திட்டத்தைபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்தி வருவது ஆகிய முயற்சிகளால் விரைவில் 200 கோடி பயன்படுத்துபவர்கள் கொண்ட நிறுவனமாக பேஸ்புக்மாறும்” எனத் தெரிவித்தார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில், “ கடந்த 2016ம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. மக்கள்ஒருவொருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள நாங்கள் பலவிதமான, ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.