உலகே ஒருகணம் திரும்பிப்பார் …!!!
இன்னும் எம் கண்களில் நீர் வருகிது…
உயிர்ப்பலி கொடுத்தோம்…
பற்றி எரியிது நெஞ்சமெல்லாம்…!

அத்தனை எறிகணை வீச்சில்…
எத்தனை மரணங்கள் எம் மண்ணில்…!!
போர் காப்பு வலயத்மதில் உறவுகள் …
பொசுங்கி போயினர் கரித்துண்டாய்..!!!
காணமல் போனோர் உறவுகள்…
பதியின்றியலைகிறான் இன்றும் …!!!
காணமல் ஆக்கப்பட்டவர் பெற்றவர்கள்…
படும் பாட்டைப் சொல்ல முடியல்லை …!!முன்னைப் பழங்குடி எம் தேசமதில் …
பகிர்ந்துண்டு வாழ்ந்தவர் நாம்…
துடித்தங்கு மடிந்தோம் தண்ணியின்றி..!!!
மீழ்குடியமர்வு என்னும் பொயருண்டு…
துயில்கொள்ளத்தரைகூட இல்லாது …!!!
நீங்கள் வரும் நேரம் வீதியேங்கும் நாம் …
சுற்றி சூழ்ந்து நின்று சொல்லுகின்றோம்…!!!
நல்லாட்சி வந்ததென்று நினைக்காதீர்கள்.. இன்னும் ஓயாது ஒலிக்கிறது ..!
மனித மரணத்தின் கதறல்கள் …!!!
நீதி வெல்லும் காலம்…. எப்போது வரும்…!
நீங்கள் சொல்லும் வேதம் …
எப்போது எமக்கு விடிவுதரும் ……!!!!