முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அரைமணி நேரத்திற்கு மேல் அமைதியாக அமர்ந்து தியானம் செய்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்தார்.

தான் சசிகலாவால் மிரட்டப்பட்டதாகவும், கட்சியினர் பலர் தன்னை அவமானப்படுத்தியதாகவும் அதனால் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறினார்.