சித்தார்த் நடிக்கும் பேய் படம் “குருதி”..!

அரன்மணை 2 வுக்குப் பிறகு சித்தார்த் சத்தமே இல்லாமல் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக்

கிரிஷ் இயக்கத்தில் சைத்தான் கே பச்சா என்ற ஆக்‌ஷன் காமெடி படத்தில் நடிக்கிறார்.
இது தவிர தன்னுடைய நண்பர் மிலிந்த் ராஜு இயக்கத்தில் த ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்ற மூன்று மொழி படத்தை இயக்கித் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு தமிழில் குருதி என்று பெயரிட்டிருக்கிறார்களாம். அரன்மணை 2 வைத் தொடர்ந்து சித்தார்த் நடிக்கும் பேய் படம் இது. சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.