வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை!

வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேப்பங்குளம் பகுதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10.30 மணியிலிருந்து 12 மணிவரையும் அப்பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.

வேப்பங்குளம் பிரதான வீதியில் நின்ற பொலிஸார் திடீரென தட்சணாங்குளம் இந்து மயானத்தை நோக்கிச் சென்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அப்பகுதியில் பெருமளவான பொலிஸார்  நின்றதை காணக்கூடியதாக இருந்தது. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.