இந்திய வெளியுறவு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை அரசின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வருகை தந்துள்ள அவர், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய வெளியுறவு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரின் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.