தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும்

ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது என்று இலண்டனில் மாபெரும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்க நாடு கடந்த அரசாங்கத்ததால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கை படைகளால் அபகரிக்கப்பட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்கை மீள கையளிக்குமாறும் அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகளை பெற்றுத்தருமாறும் தமிழ் மக்களின் சமகால பிரச்சனைகளை முன்னிறுத்தி உண்ணாவிரத போராட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் எதிர்வரும் 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளதாகவும் இதில் மக்கள் கலந்துகொண்டு எமது செய்தியை ஐநா சபைக்கு தெரிவிக்க முன்வருமாறும் அழைக்கப்படுகின்றனர்