ராணா டகுபதி ஹீரோவாக நடிக்க உள்ள “நானே ராஜா நானே மந்திரி”

திரைப்படத்தில் கேத்ரீன் தெரசா கதாநாயகியாக நடிக்க உள்ளார். பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் ராணா,தற்போது ’நானே ராஜா நானே மந்திரி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கேத்ரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார்.”இந்த படத்தில் வில்லியாக நடிப்பதன் மூலம்,என் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.மேலும் இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன்.”என காத்ரீன் தெரசா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை தேஜா இயக்குகிறார்.ராணாவின் சொந்தப் பட நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.ராணா நடிப்பில் சமீபத்தில் வெளியான ”தி காஸி அட்டாக்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.