பெரும்பான்மை சமூகங்ககள் சிறுபான்மையின சமூகங்களை சமமாக நடத்த வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு, நல்லிணக்கம், நீங்கள் என்ற தலைப்பில் கொழும்பிலுள்ள பௌத்த கலாச்சார மன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த தயான் ஜெயதிலக, புதிய அரசியலமைப்பானது தேவையற்ற ஒன்று எனவும் ஆபத்தானது எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஜே.ஆர். ஜெயவர்த்தன கொண்டுவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தேசிய பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்படவில்லை எனவும் பொருளாதார அபிவிருத்திக்காகவே கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னாள் வெளிவிவகார அமை ச்சர் ஜி.எல் பீரிஸ் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதி தலைவர் சாலிய பீரிஸ் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் செயற்குழு நிபுணர்கள் குழுவின் உறுப்பினரான கலாநிதி கே. விக்னேஸ்வரன் ஆகி யோரும் கலந்துகொண்டனர்.