பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே

ஒரு காலத்தில் கூல் கேப்டன் டோணியை காதலித்து பின்னர் யுவராஜ் சிங்கிற்காக அவரை கழற்றிவிட்டாராம். கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிககைளை காதலிப்பது புதிது அல்ல. தற்போது கூட விராட் கோஹ்லி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். முன்னதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் கிரிக்கெட் வீரர்களை காதலித்துள்ளார்.

நடிகை தீபிகா மீது தனக்கு பெரிய ஈர்ப்பு உள்ளது என்பதை கிரிக்கெட் வீரர் டோணி மறைக்கவில்லை. அதை வெளிப்படையாகவே தெரிவித்தார். டோணிக்கு தீபிகா மீது காதல் என்பது அனைவருக்கும் புரிந்தது.

டோணிக்கு மட்டும் அல்ல அவர் மீது தீபிகாவுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். ஆனால் இந்த காதல் நிலைக்கவில்லை. காரணம் தீபிகாவுக்கு வேறு ஒருவர் மீது வந்த காதல்.

தனக்கும், தீபிகாவுக்கும் இடையே காதல் இல்லை என்று கூறி வந்தார் டோணி. இந்நிலையில் தீபிகாவுக்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் மீது காதல் வர டோணியை கழற்றிவிட்டார் என்று அப்போது பேச்சாக கிடந்தது. இந்த காதல் விவகாரமும் டோணி, யுவி இடையே பிரச்சனை ஏற்பட ஒரு காரணமாம்.

டோணி ஒரு காலத்தில் நீளமாக முடி வைத்திருந்தார். அது அவரின் அப்போதைய காதலியான தீபிகாவுக்கு பிடிக்காததால் தான் முடியை வெட்டினார் என்று செய்திகள் வெளியாகின.