தனது ரசிகரின் ஆட்டோவில் பயணம் செய்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.

பத்தாண்டு கால இடைவேளைக்கு பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்த சிரஞ்சீவி,கைதி நம்பர் 150 படத்தின் வெற்றியின் மூலம் தன்னை மாஸ் ஸ்டார் என நிரூபித்துக் காட்டியுள்ளார்.வெள்ளித் திரை மட்டுமல்லாது,சின்னத்திரையிலும் ”மீலோ எவரு கோடீஸ்வரடு” என்ற நிகழ்ச்சியையும் பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் சிரஞ்சீவி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ டிரைவரும்,சிரஞ்சீவியின் ரசிகருமான சதீஷ் என்பவர் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் போது தனது ஆட்டோவில் சிரஞ்சீவி பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை சதீஷ் தெரிவித்தார்.

சதீஷின் நடவடிக்கையும்,நேர்மையாக தொழில் செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் சிரஞ்சீவியை கவர்ந்ததால்,சதீஷின் ஆசையை நிறைவேற்ற அவரது ஆட்டோவில் சிரஞ்சீவி பயணம் செய்துள்ளார்.மேலும் சதீஷுக்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 2 லட்ச ரூபாயை பரிசாகவும் சிரஞ்சீவி அளித்துள்ளார்.