பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்று வரும்

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ வெல்டர் வெயிட் பிரிவில் இந்தியாவின் மனோஜ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தப் போட்டியில் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றில் பங்கேற்ற மனோஜ் குமார், அதில் பல்கேரிய வீரர் ராபர்ட்டை தோற்கடித்தார். மனோஜ் குமார் தனது காலிறுதியில் மொரீஷியஸின் மெர்வென் கிளாரை சந்திக்கிறார்.