காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

மற்றும் துணைத்தலைவர் ராகுல்காந்தியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று சந்திக்க உள்ளார்.

தமிழக சட்டசபையில் நிகழ்ந்த அமளி துமளியை அடுத்து , திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜியை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார் . தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் . திமுகவினரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவரிடம் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசுகிறார். தமிழக அரசியல் சூழல் குறித்து முக்கிய ஆலோசனைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.