அமெரிக்கப் பள்ளிகளில் திருநங்கை மாணவர்கள்

தங்களது பாலியல் அடையாளத்துக்கு ஏற்ப ஆண் – பெண் கழிப்பறைகளையும், பொருள் வைக்கும் அறைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கடந்த ஒபாமா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசாணையை அதிபர் டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதற்கான அறிவிப்பை நீதி மற்றும் கல்வித் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. இதுதொடர்பான ஒபாமாவின் ஆணைக்கு எதிர்த்து பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளதாலும், பாலின அடையாளதுக்கு ஏற்ப மாணவர்களை கழிப்பறைக்குள் அனுமதிப்பதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் இருப்பதாலும் அந்த ஆணை திரும்பப் பெறப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அரசின் இந்த முடிவுக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்