நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கல்வி தரம் குறித்து மற்றுமொரு சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்ஷ பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட பட்டம் உட்பட மூன்று பட்டங்கள் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழ் நாமல் ராஜபக்சவின் கல்வி தகுதி தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பிரித்தானிய பல்கலைக்கழகத்திடம் இது தொடர்பில் கோரிக்கை விடுப்பதற்கு பிரஜை அமைப்புகளின் ஒன்றியம் ஆயத்தமாகியுள்ளர்.

நாமல் ராஜபக்சவின் தகவல் கோருவது தனிப்பட்ட கோபத்திற்காக அல்ல எனவும், நீண்ட காலத்திற்கு முன்னர் அரசியலில் இணைந்தவர்களுக்கு அதற்கான தகுதி உள்ளதா என்பதனை ஆராய்வதற்காகவே கோரப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு பிரித்தானியாவில் 3 பட்டங்கள் உள்ளதாகவும், அந்த பட்டங்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கு அந்த பல்கலைக்கழகங்களில் கோரிக்கை விடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அந்த பல்லைக்கழகத்தில் தகவல் பெற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச அந்த பல்கலைக்கழகத்தில் கல்வி தகுதி பெற்றிருந்தால், அது என்ன பட்டப்படிப்பு என அந்த அமைப்பு குறித்த பல்கலைக்கழகங்களில் தகவல் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவின் சட்ட பட்டப்படிப்பு தொடர்பில் சிக்கல் உள்ளதாகவும், மக்கள் வங்கி தலைவரின் மகன், நாமல் ராஜபக்ச தொடர்பில் மேற்கொண்ட பங்கு என்ன என்பது தொடர்பில் சிக்கல் உள்ளதாகவும், இதனால் நாமல் ராஜபக்ச தொடர்பில் கல்வி சான்றிதழ் ஒன்று அவசியம் எனவும் அந்த குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.