ஜெனீவாவில் 27 வெப்ரவரி 2017 ஆரம்பமாக இருக்கும் 34வது.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு மேலதிக கால நீடிப்பு வேண்டாம் என்றும். 30வது .நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பரிந்துரை செய்ப்பட்ட எந்த உடன்படிக்கையிலும் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான முன்னேற்றகரமான விடையங்களையும் இலங்கையில் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் மேற்கோள்காட்டி இலண்டன் தலைநகரில் தனிமனித போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

 

  • நாட்டின் சனாதிபதி மற்றும் பிரதம மந்திரி சர்வதேச நீதிபதிகள் கொண்ட கலப்பு நீதிமன்ற போர் குற்ற விசாரணைகளை நிராகரித்துள்ளனர்.

 

  • பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கஇறுதிப் போரில் சரணடைந்தவர்கள், காணாமற்போனோர் எவருமே உயிருடன் இல்லை” என்ற கருத்தை தெரிவித்தார்அவர்கள் தொடர்பான எந்த விபரங்களையும் வெளியிட மறுத்துவிட்டார்.

 

  • போர் குற்றம்புரிந்த இராணுவ அதிகாரிகள் தண்டிக்கபடாமல் தொடர்ந்தும் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சரத் பொன்சேக்கா இன்று இலங்கை அரசின் அமைச்சரவை பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

 

  • தற்போதைய ஐனாதிபதி மைத்திபால சிறீசேன 2009இன் இறுதி யுத்தத்தின் போது இறுதி வாரத்தில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றினார், இவரே முன் நின்று போர் குற்ற விசாரணைகளை நடத்துவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

  • யுத்தம் நிறைவடைந்தது எட்டு வருடங்கள் நிறைவடைய போகின்ற நிலையிலும் கூட இலங்கை பாதுகாப்பு படையின் பெரும்பகுதியினர் தமிழர் தாயகபகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். இவர்கள் தமிழ்மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வருகின்றனர்

 

  • தொடரும் ஆட்கடத்தல் சம்பவங்கள், விசாரணைகளற்று தொடர்ந்தும் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள், இன்னமும் மற்றாமல் இருக்கும் பயங்கரவாத தடை சட்டம் என பட்டியல் நீண்டு கொண்டெ செல்கின்றது

 

ஆகவே ஒட்டுமொத்த தமிழர்கள் வேண்டிநிற்பது .நா ஊடாக ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் அதனூடான ஒரு நிரந்தர தீர்வு ஆகும்

 

இதனை வேண்டியே இலண்டனில் தலைநகரில் குறிப்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நடமாடும் முக்கிய பகுதிகளில் தனிமனித போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன, அதில் பங்குபற்றியவர்கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு.

இது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றதின் முன் கருத்துக்களை வெளியிட்ட அருளானந்தம் அருள்லொசன், யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் இன்னும் ஒரு தீர்வை கூட வழங்கவில்லை, சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்த ஒர் தீர்வயும் தரப்போவதும் இல்லை. இன்று மக்கள் வீதியில் இறங்கிப் சொந்த நிலங்க்ளில் குடியேறுவதற்காக போராடுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா தான் ஒரு தீர்வை பெற்றுத்தரவேண்டும் எனக்கூறினார்.

யேகதீசன் கயந்தன் London Eye பகுதியில் கூடிநின்ற மக்களிடம் கூறியது. நல்லாட்சி அரசாங்கம் என்று தங்களை தாங்கள் கூறும் மைத்திரி அரசு தமிழ்மக்களுக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்கவில்லை, .நாவின் 18 மாத காலம் நிறைவடையும் நிலையில் கூட இலங்கையில் தமிழ் மக்களுக்கான எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. தமிழ்மக்கள் அனைவரும் வேண்டிநிற்பது .நா ஊடாக சர்வதேச சுயாதீன விசாரணை தான் இடம்பெற வேண்டும் என கூறினார்.

பிரதம அலுவலகத்தின் முன்னால் 10 Downing Street இல் கூடிநின்றவர்களிடம் பிரசாத் மகாலிங்கம் கூறியதாவது, போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அது தொடர்பாக எதுவிதமான விசாரணையும் இலங்கையில் நடைபெறவில்லை. தமிழ்மக்கள் ஐ.நாவிடம் வேண்டிநிற்பது ஒரு சுயாதீன சர்வதேச விசாரணையே இது தான் தமிழ்மக்களுக்கு ஒரே ஒரு தீர்வாக அமையும் என்றார்.

ராஐசூரியர் ராமநாதன் London Big Ben பகுதியில் கூடிநின்றவர்களிடம் தெரிவித்த கருத்தாவது. தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களில் இருந்து இராணுவம் இன்னும் வெளியேறவில்லை. மாறாக தொடர்ந்தும் தமிழ்மக்களின் நிலங்கள் பறிக்கப்படு வருகின்றன, காணாமல் போனவர்களிற்கு என்ன நடந்தது என்ற தகவல்களை வெளியிடவில்லை, அரசியல் கைதிகள் அனைவருக்கும் இன்னும் விடுவிக்கப்படவில்லை ,போர் குற்றம் புரிந்த இராணுவத்தினர் தண்டிக்கபடவில்லை, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைமீறல், போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை சர்வதேச நீதிபதிகள் முன் வழக்கு தொடுப்பதன் ஊடாகதான் தமிழ்மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.

முகுந்தன் குணாளசிங்கம் Buckingham palace பகுதியில் கூடிநின்ற மக்களிடம் கூறியதாவது, இலங்கைக்கு மீண்டும் ஒரு கால நீட்டிப்பை வழங்குவதன் ஊடாக அங்குள்ள சாட்சியங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டும், போர் குற்ற ஆதாரங்கள் சிதைக்கப்படும் தமிழ்ர்களுக்கான நீதி மறுக்கப்படும். தமிழ்மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் இலங்கையில் ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை தான் இடம்பெற்ற வேண்டும் என தெருவித்தார்.

செய்தி அறிக்கை

News By Thaayakan