இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் தமிழ் மக்களினால் லண்டனில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (2017.02.26)முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் குறித்து போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவாரான பொன்ராசா கிறிஸ்ரிராஜ் கருத்து தெரிவிக்கையில்
தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாக இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை படைகளால் அபகரிக்கப்பட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்களை மீள கையளிக்குமாறும், அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகளை பெற்றுத்தருமாறும் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

குறித்த போராட்டம் 10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் இன்று மாலை 4 மணி முதல் இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய கோரிக்கைகளாவன…

‘எமது நிலம் எமக்கு வோண்டும், கேப்பாப்புலவு மக்களின் காணியை விட்டு இராணுவமும் வெளியேறு.

யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிவேண்டும்.

தமிழின ஆழிப்பிற்கு துணைபோன சிங்களப்பேரினவாத தலைவர்களையும் இராணுவத்தையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த சர்வதேச விசாரணையே வேண்டும்.

பிரித்தானிய அரசாங்கமே “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்” இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கத்துனண போகாதே.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழரின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

அத்தோடு இலங்கை படைகளால் அபகரிக்கப்பட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்கை மீள கையளிக்குமாறும் அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகளை பெற்றுத்தருமாறும் தமிழ் மக்களின் சமகால பிரச்சனைகளை முன்னிறுத்தி உண்ணாவிரத போராட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.