என் தேசம் என் உரிமை என்ற பெயரில்

புதிய கட்சி தொடங்கியுள்ள இளைஞர்களுக்கு நடிகர் விவேக் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அமைதியான வழியில் போராடிய இளைஞர்கள் சேர்ந்து என் தேசம் என் உரிமை என்ற பெயரில் புதிய கட்சி துவங்கியுள்ளனர்.

ஆன்லைன் மூலம் அந்த கட்சியில் 6 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்துவதை எதிர்த்து போராட திட்டமிட்டுள்ளனர்.

இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு, ஆயினும் பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்லக்கண்ணு, சகாயம் போன்ற சமூகத் தூயவர்களிடம் ஆசியும், ஆலோசனையும் பெறுவது நலம் என தெரிவித்துள்ளார்.