பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்   M.P திரு. திருக்குமரன் இராசலிங்கம்   மற்றும் செயற்பாட்டாளர்களான நாகேந்திரன் சிந்துஜன், கோவிந்தபிள்ளை லிங்கேஸ்பரன், ராயசிங்கம் ப்ராட் ஹரீஸ், கனகரட்ணம் நரேஸ், தர்மராயா கங்காதரன் ஆகியோர் இலங்கை அரசாங்கத்தின் தமிழர்களிற்கெதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம்தெரிவிக்கும் வகையில் 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 10 Downing Street முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.இப்  பாேராட்டமானது இன்றுடன் இரண்டு நாளாகியும்  மழை கடும் குளிர் என பாராது  தாெடர்ந்து நடைபெற்று வருகின்றது.

.இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழீழமே எமது இறுதித் தீர்வு எனும் வெளிப்பாட்டுடனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் லண்டனில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும்
ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது என்றும் ஐ.நாவிற்கு ஸ்ரீலங்கா அரசு தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூறியும்

ஸ்ரீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தமிழர் பூர்வீக நிலங்களை மீளளிக்குமாறும் தொடர்ச்சியாக கேப்பாப்புலவு மக்களினால் முன்னெடுக்கப்படும் காணிகளை மீட்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்னும் சில முக்கிய கோரிக்கைகளை வைத்தும் உண்ணாவிரத போராட்டம் 26/02/2017 தொடங்கி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

06 அம்சக் காேரிக்கைகளான

  1. எமது நிலம் எமக்கு வேண்டும் கேப்பாப்புலவு மக்களின் காணியைவிட்டு இராணுவமே வெளியேறு,
  2. சரணடைந்த போர்க்கைதிகள் அரசியற்கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டும்.
  3. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளையும் மக்களையும் மீண்டும் கைது செய்வதை நிறுத்து.
  4. ஸ்ரீலங்காவின் தமிழின அழிப்பிறகு துணைபோன சிங்களப்பேரினவாதத் தலைவர்களையும் இராணுவத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த சர்வதேச விசாரணையே வேண்டும்.
  5. பிரித்தானிய அரசே ” தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்” ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க துணைபோகாதே.
  6. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க சர்வசன வாக்கெடுப்பு நாடாத்தப்படவேண்டும்.

பெருமளவான மக்களின் ஒத்துழைப்புடன் போராட்டம் தொடர்ந்தவண்ணமுள்ளது. இரவிரவாக கொட்டும் மழையிலும் கடுமையான குளிர்காற்றின் மத்தியிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொண்டர்கள் ஆதரவுடன் உண்ணாவிரதப்போராட்டம் உணர்வுபூர்வமாக தொடர்கின்றது.

தமிழ் மக்களாகிய நாம் எமது உரிமைகளுக்கான பாேராட்டத்தை வலு சேர்க்கும் வகையில்  எமது உறவுகளுக்கு  அழைப்பு   விடுக்கப்பட்டிருக்கின்றனர்.