ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் நடிகர்,

இயக்குனரான வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மலையாள நடிகைக்கு நடந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியானேன். இது திரைப்பட துறையினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகைகளுக்கு மட்டுமல்லாமல், சிறுமிகளுக்கும் இந்த அவல நிலை ஏற்பட்டு வருகிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பெற்றோர்கள் தான், இது போன்ற பாலியல் தொல்லை தொடர்பாக தங்களது பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என் அப்பாவைப் போல் எனக்கு இசையில் ஆர்வம் இல்லை. மாறாக இயக்குனராக வர வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது. கடவுளின் அருளால் அது நடந்து விட்டது. அதேபோல் பிரேம்ஜியும் இசையமைப்பாளராக வரவேண்டும் என்பது தான் ஆசை.

அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு ஒருபோதும் வந்ததுயில்லை. ஆனால், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு காமெடி படம் எடுக்க வேண்டும் என்பது எனக்கு ஆசையாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.