இலண்டனில் நான்காவது நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்

தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாக கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்த அறவழிப்போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் 10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் தொடர்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்ததால் ஒழுங்குபடுத்தபபட்டு நடைபெறும் இப் போராட்டத்தில்,

ஐ.நா தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது கால அவகாசம் மேலும் நீடிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் ஆதரவு வழங்கக்கூடாது என்றும், இலங்கை படைகளால் அபகரிக்கப்பட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்கை மீள கையளிக்குமாறும் அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத அனைத்து காணிகளை பெற்றுத்தருமாறும், தமிழ் மக்களின் சமகால பிரச்சனைகளை முன்னிறுத்தி காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டமாக இது முன்னெடுக்கப்பட்டு வருகிறது .