ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பல பொய்களை கூறிக்கொண்டு சென்ற இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர சில உண்மைகளை மறைத்துவிட்டார் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு உலகிற்கு தொடர்ந்து பல பொய்களை கூறிக்கொண்டு இருப்பதாகவும், அதை நேரடியாகவே அமைச்சரிடம் வினவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐ.நா கூட்டத்தொடரில் அமைச்சர் மங்கள் சமரவீரவின் உரை தொடர்பில் பல விடயங்களை மணிவண்ணன் பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ மக்களுக்கு இலங்கை அரசு ஒன்றும் செய்யாது : ஜெனீவாவில் ச.வி.கிருபாகரன்

ஐக்கிய நாடுகள் சபையின் நேற்றைய கூட்டத்தொடரில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை முற்றிலும் பொய்யானது என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னைய அமைச்சர்களைப் போல் இவருடைய உரையும், கற்பனைகளும் கதைகளும் அடங்கியதாக இருந்ததாகவும், சர்வதேசத்திற்கு இனிமையான கதைகள் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் கூறிய கருத்துக்கள் குறித்த காணொளியில்..