அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காலம் அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.

டிரம்ப்பின் புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு நடைமுறைக்கு வந்தால் நன்கு படித்த திறமையுள்ள இந்தியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான புதிய பாதையாக இது அமையும்.

தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு தனிநபரின் பணிபுரிந்த வரலாறு மற்றும் படிப்பு சான்றுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

இது குறித்த மசோதா பற்றி ஆராய்ந்து வரும் நிலையில், இதே போன்ற விதிகளை வளர்ந்த நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளன.

இந்தியர்கள் தற்போது உள்ள சூழலில் தகுதி அடிப்படியிலான அமைப்பிற்கு மிகுந்த பொருத்தம் உடையவர்கள். பேவ் அறிக்கையின் படி அமெரிக்காவில் உள்ள 70 சதவீத இந்தியர்கள் கல்லூரி படிப்பை முடித்தவர்கள். அதிலும் பலர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்.

தற்போது உள்ள டிரம்ப் தலைமையிலான அரசு இதைப் பற்றிக் கடுமையாக விவாதிக்கும் என்றும் இதனால் ஏழை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும், குறைந்த திறன் உடைய ஊழியர்கள் அமெரிக்கா வருவது பாதிக்கும் என்றும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக இது பாரபட்சமாக உள்ளதாகவும் பார்க்கப்படுகின்றது.

கனடாவில் குடியேற்ற விண்ணப்பதாரர்களுக்குக் கல்வி, திறன்மட்டங்கள், வேலைவாய்ப்பு, மொழி மற்றும் குடும்ப உறவுகள் போன்ற பல்வேறு தகுதிகளுக்கான புள்ளிகள் உள்ளன. பிற நாட்டவர் அங்கு குடியேற அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்பதற்கு ஏற்றக் குறைந்த பட்ச மதிப்பெண் பெற வேண்டியது அவசியம்.

ஆண்டிற்கு 140,000 நபர்கள் அமெரிக்காவில் ஊழியர்கள் சார்ந்த க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் பல இந்திய ஊழியர்கள் 12 வரை காத்திருக்கும் சூழல் நிலவி வருகின்றது. தகுதி விலக்கு உடையவர்கள் மட்டும் 9 வருடத்தில் க்ரீன் கார்டு பெற முடிகின்றது. தகுதி வாரையிலான அமைப்பு பின்பற்றப்பட்டால் இந்தக் காத்திருப்பு பட்டியல் குறைய வாய்ப்புள்ளது.

இப்படி விதிகள் மாற்றப்படும் போது அண்ணன், தம்பி, அக்கா, பெற்றோர் போன்றவர்கள் குடியேறுவது பாதிக்க வாய்ப்புள்ளது.