Sjjssj

இளையதளபதி விஜய்யின் உதவியால் சிம்புவின் ‘வாலு’ படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. விஜய்யின் இந்த உதவியை சிம்பு தனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார் என்பது மட்டும் உறுதி. இந்நிலையில் விஜய்யின் இந்த உதவிக்கரம் தொடர்ந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஜய்யின் ஆரம்பகால படங்களில் உடன் நடித்தவரும், பிரபல காமெடி நடிகருமான கவுண்டமணி நடித்த ’49ஓ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒருசில மாதங்கள் ஆகியும் ஒருசில பிரச்சனைகளால் அந்த படம் ரிலீஸ் ஆக தாமதமாகியது. கவுண்டமணியின் நகைச்சுவையை கூடவே இருந்து ரசித்தவரும் அவருடைய ரசிகர்களில் ஒருவருமான விஜய் உடனே இதுகுறித்து கேள்விப்பட்டதும் ’49ஓ’ படம் ரிலீசாக தேவையான உதவிகளை செய்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் இந்த உதவியை அடுத்து தற்போது அந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இதே தேதியில்தான் விஜய்யின் ‘புலி’ படம் ரிலீசாக இருந்ததும், அதன் பின்னர் அக்டோபர் 1ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கலைஞனின் உண்மையான வெற்றி அவர் நடித்த படம் கோடி கோடியாய் வசூல் செய்வதில் இல்லை. சக கலைஞர்களின் படங்கள் பிரச்சனையில் இருக்கும்போது உதவி செய்வதில்தான் அந்த நடிகரின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. சிம்பு, கவுண்டமணியை அடுத்து விஜய்யின் உதவிக்கரம் தொடர்ந்தால் கோலிவுட்டில் நலிந்த கலைஞர்களே இல்லாத நிலை விரைவில் ஏற்படும் என்பது மட்டும் உண்மை.