ஜேர்மனி – வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகி நகுலேஸ்வரி சிவநாதனின் பணிநிறைவுப் பெருவிழா

ஜேர்மனி – வூப்பெற்றால் தமிழாலயத்தில் 23 ஆண்டுகள் தமது நகரத்தில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் நலனுக்காக உழைத்த நிர்வாகி நகுலேஸ்வரி சிவநாதனின் பணி நிறைவு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் ஜேர்மனி – வூற்றுப்பெற்றால் நகரில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த விழாவினை அந்த நகரத்தின் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களாகப் பணியாற்றும் பீற்றர், ஜேயா மற்றும் ஞானம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்ததுடன், இதன்போது பெற்றோர், ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், நகரிலுள்ள தமிழ் உறவுகளெனப் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை பீற்றர் மற்றும் நகுலேஸ்வரி ஆகியோரின் நிர்வாக நிறைவிற்கு பின் தற்பொழுது வே.லோகநாதன் வூப்பெற்றால் தமிழாலயத்தின் நிர்வாகியாக பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.