இலங்கை அகதிகள் விடயத்தில் மாற்றுத்திட்டம் இல்லை!

அமெரிக்காவின் குடியேற்றத்திட்டம் நிறைவேற்றப்படும் வரையில், இலங்கை உட்பட்டநாடுகளின் அகதிகளை குடியேற்றும் விடயம் தொடர்பில் எந்த மாற்றுத்திட்டத்தையும் முன்வைக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டேர்ன்புல்தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளில் ஆயிரத்து 250 பேரை தமது நாட்டில் குடியேற்றுவதற்குஅமெரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 200 பேர் அங்கு குடியேற்றப்பட்டுள்ளனர்.எனவே இந்த திட்டம் நிறைவடையும் வரை அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பில் உள்ள அகதிகள்குறித்த மாற்றுத்திட்டங்கள் வகுக்கப்பட மாட்டாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசிக்கின்ற அகதிகளை குடியேற்றுவதில்லைஎன்ற கொள்கையை அவுஸ்திரேலியா பின்பற்றுகிறது.

அத்துடன் நியூசிலாந்து அரசாங்கம் 150 அகதிகளை பொறுப்பேற்றுக் கொள்வதாக வழங்கியவாய்ப்பினையும் அவுஸ்திரேலிய பிரதமர் மறுத்துள்ளார்.