சித்தி திட்டியதால் இலங்கை அகதி தற்கொலை!

இந்தியா – சிவகாசி அருகே இலங்கை அகதி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகாசி அருகே செவலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 22 வயதுடைய விஜயன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது சித்தியான பரமேஸ்வரியின் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதனை சித்தி பரமேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஜயன் கடந்த 25 ஆம் திகதி விஷம் குடித்துள்ளார்.

இவர் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி விஜயன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து எம்.புதுப்பட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.