IFதமிழ் திரை உலகில் முக்கியமான ஹீரோக்களுடன் நடித்து வருபவர் சமந்தா. அவர் நடித்த படங்களை அவரே பார்ப்பது இல்லை என்கிறார். காரணம் என்ன? அவரே சொல்கிறார்… நான் நன்றாக நடிக்க வேண்டும் என்று விரும்புவேன். படங்களில் இயக்குனர் விருப்பப்படி திருப்தி ஏற்படும் வரை நடிப்பேன்.

ஆனால் நான் நடித்த படங்களை நான் பார்க்க மாட்டேன். அதில் எனக்கு விருப்பம் இல்லை. என் நடிப்பை யாராவது குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம். தமிழில் நான் விக்ரமுடன் நடித்துள்ள ‘பத்து எண்ணறதுக்குள்ள’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறேன். இது எனக்கு புதிய அனுபவம். இந்த படத்தில் என் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

தமிழில் நான் முதலில் நடித்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. ஆனால் ‘விண்ணை தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக்கில் நான் நடித்தேன். அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு படம் தோல்வி அடைந்து விட்டது என்று சோர்ந்து போனால் கவலைதான் மிஞ்சும். எத்தனையோ வெற்றி தோல்வியை பார்த்துள்ளேன். எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடித்து வருவதால்தான் அடுத்த படங்களில் வெற்றி பெற முடிகிறது.

தற்போது ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறேன். இடைவெளி விழுந்தால் தோல்விகளை நினைத்து அழுது கொண்டுதான் இருக்கவேண்டும். அப்படி ஒரு நிலை வராமல் தமிழ், தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. இதில் கதைக்கு ஏற்ப சிந்தித்து நடித்து வருகிறேன். மேலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.