யாழ்ப்பாணம் – அரியாலையில் புகையிரதம் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய பணித்த கடுகதி புகையிரதத்துடன் குறித்த இளைஞர் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

குறித்த சடலம் புகையிரத இயந்திரப் பகுதிக்குள் அகப்பட்டுக் கொண்டதால் நாவற்குழி புகையிரத நிலையத்தில் வைத்தே சடலத்தை மீட்க முடிந்துள்ளது.

புத்தூர் வடக்கு புத்தூரைச் சேர்ந்த 21 வயதுடைய ரவிச்சந்திரன் கஜீபன் என்ற இளைஞரை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

train_body-4-600x412

train_body-3-600x412

train_body-2-600x412

train_body-1-600x412