இன்று நாடு திரும்பும் ஈழ அகதிகள்!

இன்று நாடு திரும்பும் ஈழ அகதிகள்!

தமிழ்நாட்டிலிருந்து ஒரு தொகுதி ஈழ அகதிகள் இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நடவடிக்கையின் பிரகாரம் குறித்த அகதிகள் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்ரூ முன்  தினம் தமிழகத்திலிருந்து 28 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.