முதல்படமான ‘ராஜா ராணி’ அடைந்த மாபெரும் வெற்றியால் இளையதளபதியுடன் இரண்டாவது படத்தை இயக்கும் இயக்குனர் அட்லி, இன்னொரு தைரியமான முடிவை தற்போது எடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் 59-வது படத்தின் வேலைகளில் மும்மரமாக தற்போது ஈடுபட்டிருக்கும் அட்லி, அவரது இணை இயக்குனராக பணிபுரிந்து வரும், ஐசக்கிற்காக தயாரிப்பாளர் ஆக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவரது முதல் படத்தை தயாரித்த ‘பாக்ஸ் ஸ்டார்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இத்திரைப்படத்துக்கு நடிகர் ஜீவா நாயகனாக இருப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அட்லி இயக்கும் ‘விஜய்-59’ படம் வரும் 2016-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நாயகிகள் சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன் நடிக்க இருக்கின்றனர்.