நான் ஒரு போதும் அஜீத் ஜோடியாக நடிக்க மாட்டேன் நடிகை ஷாமிலி

Shamili-Latest-Stills-16-e1441624377299

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர் அஜீத் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி.
2009-ல் நாயகி அந்தஸ்து பெற்ற ஷாமிலி, அப்போது ‘ஓய்’ என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு நடிப்பில் ஆர்வம் காட்ட வில்லை. இப்போது தமிழ் பட உலகில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஒரு தனுஷ் ஜோடியாக நடிக்க ஷாமிலி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இது தவிர மலையாளம், தெலுங்கு படங்களில் நடிப்பது பற்றியும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இது குறித்து ஷாமிலி கூறும்போது,

நான் சினிமாவில் நடிப்பதில் அக்காள் கணவர் அஜீத்துக்கு அவ்வாளவாக விருப்பம் இல்லை. என்றாலும், நான் நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை சொன்ன உடனே அதற்கு முழு ஆதரவு கொடுத்தார். நான் போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்பியதும், அவரே என்னை போட்டோ எடுத்தார். அதை மறக்க முடியாது.

அவர் மிகவும் அமைதியானவர் வீட்டையும் குடும்பத்தையும் மிகவும் விரும்புவார். அவருடன் இருக்கவேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவார்கள். நடிப்பில் திறமையை காட்ட வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

நான் ஒரு போதும் அஜீத் ஜோடியாக நடிக்க மாட்டேன். அவருடைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது பற்றி சிந்திப்பேன். எனக்கு மார்டனாக நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் கவர்ச்சியாக நடிக்க விருப்பம் இல்லை.