அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி!

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி!

அமெரிக்காவில் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் திடீரென துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற நிலையில், அங்கிருந்து மாணவர்கள் வெளியில் ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் உள்பட பலர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.